ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் நயன்தாரா!

ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் நயன்தாரா!

ரஜினியுடன் மீண்டும் இணைகிறார் நயன்தாரா!

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 11:35 am

சிம்ரன், அசின், த்ரிஷா, தமன்னா, காஜல்அகர்வால் உள்ளிட்ட பல முன்னணி நடிகைகளுக்கு இன்னமும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. ஆனால், நயன்தாராவுக்கு அது ஒரு முறை அல்ல, பல முறை கிடைத்து விட்டது.

முதன்முதலில் பி.வாசு இயக்கிய சந்திரமுகி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் நயன்தாரா. அதையடுத்து, ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த சிவாஜியில் ஒரு பாடல் காட்சியில் ரஜினியுடன் நடனமாடினார்.

அதன்பிறகு பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த குசேலன் படத்தில் ரஜினி நடிகராகவே நடிக்க, நயன்தாராவும் நடிகை வேடத்திலேயே நடித்திருந்தார்.

இந்த நிலையில், தற்போது அஜீத், ஆர்யா, சிம்பு, ஜெயம்ரவி, சூர்யா என்று நடித்துக்கொண்டிருக்கும் நயன்தாரா ரஜினி நடிக்கும் லிங்காவிலும் நடிக்கிறாராம்.

இந்த படத்தில் ஏற்கனவே இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் இருந்தபோதும், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பாடல் காட்சியில் ரஜினியுடன் தோன்றுகிறாராம் நயன்தாரா.

எந்த படத்திலும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதில்லை என்று கட்டுப்பாட்டை கடைபிடித்து வரும் நயன்தாரா, ரஜினி படம் என்பதால் அந்த கட்டுப்பாட்டை முதன்முறையாக தளர்த்தியிருக்கிறார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்