மாயமான மலேசிய விமானம் MH370 சுட்டு வீழ்த்தப்பட்டது; அவுஸ்திரேலிய புத்தகம் பரபரப்பு தகவல்

மாயமான மலேசிய விமானம் MH370 சுட்டு வீழ்த்தப்பட்டது; அவுஸ்திரேலிய புத்தகம் பரபரப்பு தகவல்

மாயமான மலேசிய விமானம் MH370 சுட்டு வீழ்த்தப்பட்டது; அவுஸ்திரேலிய புத்தகம் பரபரப்பு தகவல்

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 5:46 pm

இராணுவ பயிற்சியின்போது மாயமான மலேசிய விமானமான MH370 சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக புத்தகமொன்றில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்து – அமெரிக்கா இராணுவ கூட்டுப்பயிற்சியின் போது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றும் பின்னர் இந்த தகவல் மூடிமறைக்கப்பட்டுள்ளது எனவும். மாயமான விமானம் குறித்து எழுதப்பட்ட புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த உறவினர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது குறித்து இந்த புத்தகம் வெளியாகியுள்ளது.

“விமானம் MH370 மர்மம்” (Flight MH370 The Mystery) என்ற புத்தகம் அவுஸ்திரேலியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. லன்டனை சேர்ந்த   எழுத்தாளர் நைஜல் கோவ்தோன் (Nigel Cawthorne) இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அவர்களின் உறவினர்களுக்கு என்ன நடந்தது என்று கிட்டத்தட்ட நிச்சயமாக எதுவும் தெரிந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூசிலாந்தை சேர்ந்த மைக் மெக்கே (Mike McKay) நேரடியாக நடந்த சம்பவத்தை பார்த்ததாக குறிப்பிட்டு இந்த புத்தகத்தில் நைஜல் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மாயமான மலேசிய விமானம் கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்ததை அடுத்து சுட்டு வீழ்த்தப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் மாயமானபோது தெற்கு சீன கடலில் தாய்லாந்து, அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் மற்ற பணியாளர்கள் இணைந்து போர் பயற்சி நடத்தினர். இந்நிலையில் விமானம் ஒன்று எரிந்து தாய்லாந்து வளைகுடா பகுதியில் விழுந்ததை மைக் மெக்கே பார்த்துள்ளார் என்று இரண்டையும் ஒப்பிட்டு நைஜல் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பயிற்சியின் துப்பாக்கி சூடு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனது. அப்போது எதிர்பாராத விதமாக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம் என்று புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங்கிற்கு புறப்பட்டுச்சென்ற மலேசிய எயார்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் மாதம் 8ஆம் திகதி நடுவானில் மாயமானது. விமானம் குறித்து இதுவரை உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை.

இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற வியூகத்தில் தேடுதல் முன்னெடுக்கப்பபட்டது, எனினும் பலன் இல்லை. அல்கைதா ஆதரவாளர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SOURCE: SMH


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்