மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்; பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்; பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை

மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்; பொலிஸாருக்கு நீதவான் எச்சரிக்கை

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 5:21 pm

நீதிமன்ற உத்தரவை மீறியமை, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 09 மாணவர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த மாணவர்கள் ஒரு இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் 04 மாணவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதால், அங்குசென்ற நீதவான் அவர்களுக்கும் பிணை வழங்கினார்.

குறைந்த அதிகாரத்தினை பயன்படுத்துவதாகத் தெரிவித்து, மாணவர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாமென கோட்டை நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு எச்சரித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்