பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற மூவருக்கு விளக்கமறியல் (Video)

பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற மூவருக்கு விளக்கமறியல் (Video)

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 8:43 pm

கட்டான பகுதியில் பொலிஸாரை கூரிய ஆயுதத்தினால் தாக்க முயற்சித்த சந்தர்ப்பத்தில் கைதான மூவர், எதிர்வரும் 02 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மோதலை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்துவதற்கு நேற்றிரவு சந்தேகநபர்கள் முயற்சித்துள்ளதுடன், அதன்போது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர்.

இதன்போது இருவர் காயமடைந்ததுடன், அவர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மற்றையவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்