நிறைவுகாண் வைத்திய உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

நிறைவுகாண் வைத்திய உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

நிறைவுகாண் வைத்திய உத்தியோகத்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கிறது

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 1:53 pm

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தாம் மேற்கொண்ட அடையாள பணிப் பகிஷ்கரிப்பு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதென நிறைவுகாண் வைத்திய உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த சங்கம் தெரிவிக்கிறது.

நிறைவுகாண் வைத்திய உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த சங்கத்துக்கு சொந்தமான ஐந்து பிரிவுகளைச் சேர்ந்த 300க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் இந்தப் பணிப் பகிஷ்கரிப்பில் இணைந்துகொண்டதாக சங்கத்தின் பிரதம செயலாளர் சமன் ஜயசேகர கூறினார்.

இணை சுகாதார விஞ்ஞான பட்டப்படிப்பை 3 வருடங்களாக குறைப்பது மற்றும் அது சார்ந்த மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த அடையாள பணிப் பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

இணைந்த சுகாதாரப் பிரிவு மாணவர்களை தடுக்கும் இவ்வாறான அடக்கு முறைகளை கைவிட்டு முரண்பாட்டை தீர்த்து இணை சுகாதார விஞ்ஞான பட்டப்படிப்பை 4 வருடங்களாக நிலைப்படுத்தமாறு இதன் மூலம் அரசாங்கத்தை கோருவதாக வைத்திய சேவைகள் ஒருங்கிணைந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் சமன் ஜயசேகர  வலியுறுத்தினார்.

காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந்த அடையாள பணிப் பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகிறது என்றும், இதனால் இராசாயன ஆய்வு சேவைகள், மருந்து விநியோகம், எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் சேவைகள் ஆகியன நான்கு மணித்தியாலங்களுக்கு தடைப்படும் எனவும் நிறைவுகாண் வைத்திய உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த சங்கத்தின் பிரதம செயலாளர் இன்று காலை தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக நிறைவுகாண் வைத்திய உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த சங்கத்தைச் சேர்ந்த ஐந்து பிரிவுகளின் உத்தியோகத்தர்கள் இன்றைய தினம் பணிக்கு சமுகமளிக்கவில்லை என்று கொழும்பு தேசிய வைத்தியாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சிறில் டி சில்வா தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்