தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு நரேந்திர மோடிக்கு பங்களாதேஷ் பிரதமர் அழைப்பு

தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு நரேந்திர மோடிக்கு பங்களாதேஷ் பிரதமர் அழைப்பு

தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு நரேந்திர மோடிக்கு பங்களாதேஷ் பிரதமர் அழைப்பு

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 9:37 am

தமது நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு இந்தியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடிக்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள ஷேக் ஹசீனா அவரின் தலைமைத்துவத்தின் கீழ் இரு தரப்பு உறவுகள் மேம்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் எல் கே அத்வானியை அவரின் இல்லத்தில் வைத்து நரேந்திர மோடி நேற்று சந்தித்துள்ளார்.

அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு முன்னதாக முக்கிய கூட்டணிக் கட்சியின் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

முக்கிய தீர்மானங்களை மேற்கொள்வதில்  86 வயதான எல் கே அத்வானி தொடர்ந்தும் முக்கிய பங்கு வகிப்பதை இந்த சந்திப்பு எடுத்து காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்