சந்திக்க ஹதுருசிங்ஹ பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின்  பயிற்றுவிப்பாளராக நியமனம்

சந்திக்க ஹதுருசிங்ஹ பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்

சந்திக்க ஹதுருசிங்ஹ பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம்

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 10:34 pm

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சந்திக்க ஹதுருசிங்ஹ பங்களாதேஷ் கிரிக்கட் அணியின் பிரதான பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்திக்க ஹத்துருசிங்ஹ இரண்டு வருடகால ஒப்பந்தத்தின் அடிப்படையில், பங்களாதேஷ்  கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவர் இதற்கு முன் நியூ சவுத்வேல்ஸ் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளர் பதவியையும் சிட்னி தண்டர் அணியின் பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டமை குறிப்பிடத்த்ககது.

சந்திக ஹத்துருசிங்ஹ இதுதொடர்பில் கலந்துரையாட எதிர்வரும்  ஜூன் மாதம் 10 ஆம் திகதி பங்களாதேஷ் செல்லவுள்ளார்.

சந்திக்க ஹதுருசிங்ஹவின் முதலாவது சர்வதேச கிரிக்கட் அணியொன்றிற்கான நியமனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி சந்திக்க ஹதுருசிங்ஹ பயிற்றுவிப்பாளர் பொறுப்பை ஏற்பார் என பங்களாதேஷ் கிரிக்கட் சபையின் தலைவர் நஸ்முல் ஹஸன் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்