கடற்பாதுகாப்பு பிரிவை கலைப்பதற்கு தென்கொரியா தீர்மானம்

கடற்பாதுகாப்பு பிரிவை கலைப்பதற்கு தென்கொரியா தீர்மானம்

கடற்பாதுகாப்பு பிரிவை கலைப்பதற்கு தென்கொரியா தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 12:19 pm

தமது கடற்பாதுகாப்பு பிரிவை கலைப்பதற்கு தென்கொரியா திட்டமிட்டுள்ளது.

அண்மையில் பயணிகள் கப்பல் கவிழ்ந்தில் 300 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்த நிலையில் அந்த நாட்டு ஜனாதிபதி பார்க் ஹியூன் ஹைய் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் விபத்திற்கு உத்தியோகபூர்வமாக தென்கொரிய ஜனாதிபதி மன்னிப்புக் கோரியுள்ளார்.

மீட்புப் பணிகளை புதிய பாதுகாப்பு நிலையம் மேற்கொள்ளும் என தென்கொரிய ஜனாதிபதி பார்க் ஹியூன் ஹைய் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு  கடற்பாதுகாப்பு பிரிவு தவறியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்