இந்திய மக்களவைத் தேர்தலில் பிரகாசிக்கத் தவறிய விளையாட்டு நட்சத்திரங்கள்

இந்திய மக்களவைத் தேர்தலில் பிரகாசிக்கத் தவறிய விளையாட்டு நட்சத்திரங்கள்

இந்திய மக்களவைத் தேர்தலில் பிரகாசிக்கத் தவறிய விளையாட்டு நட்சத்திரங்கள்

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 2:53 pm

விளையாட்டு வீரர்கள் அரசியலுக்கு வருவதும் தேர்தலில் போட்டியிடுவதும் புதிய விடயமல்ல, எனினும் முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்திய மக்களவைத் தேர்தலில் கால்பந்து, கிரிக்கெட், மற்றும் ஹொக்கி அணி தலைவர்கள், ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரர்கள் என பலர் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கிரிக்கெட் வீரர்களில் மொஹமட் அசாருதீன் மற்றும் மொஹமட் கயீப் ஆகியோர் தோல்வியை தழுவினர்.

காங்கிரஸ் வேட்பாளர் அசாருதீன் கடந்த முறை போட்யிட்டு வெற்றி பெற்றிருந்தார், இந்த முறை அவரால் 4 இலட்சம் வாக்குகளைப் பெறமுடிந்த போதிலும் வெற்றிபெற முடியவில்லை.

தனது அபார களத்தடுப்பு மூலம் இந்திய அணியில் இடம் பிடித்த சகலதுறை வீரர் மொஹமட் கயீப்,  தற்போதும் உத்தரப் பிரதேச அணிக்காக விளையாடி வருகிறார். இவர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இவருக்கு ஒரு இலட்சத்திற்கும் குறைவான வாக்குகளே கிடைத்தன.

1983ஆம் ஆண்டு கிரிக்கெட் உலக கிண்ணத்தை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த, பா.ஜ.க வேட்பாளர் கீர்த்தி ஆசாத் தொடர்ந்து 3ஆவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் தலைவர் பாய்சுங் பூட்டியா திரிணமூல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் தோல்வியடைந்த பூட்டியா அர்ஜுனா, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ள பூட்டியா கால்பந்து விளையாடிய காலத்தில் கோலடிக்க கிடைத்த வாய்ப்புகளை பெரும்பாலும் தவற விட்டதே இல்லை.

2004ஆம் ஆண்டு எதென்ஸ் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பெயரை சர்வதேச அளவில் நிலை நாட்டிய ரத்தோர். இத்தேர்தலில் பா.ஜ.க சார்பில் ராஜஸ்தானில் போட்டியிட்டு  மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார்.

ராஜ்யசபா உறுப்பினராக உள்ள முன்னாள் ஹொக்கி தலைவர் திலீப் திர்கே, ஒடிசாவில் போட்டியிட்டார். இறுதியில் தோல்வியே பரிசாக கிடைத்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்