இடிதாங்கியை திருட முயன்ற பிரதேச சபை உறுப்பினர்  கைது

இடிதாங்கியை திருட முயன்ற பிரதேச சபை உறுப்பினர் கைது

இடிதாங்கியை திருட முயன்ற பிரதேச சபை உறுப்பினர் கைது

எழுத்தாளர் Staff Writer

19 May, 2014 | 5:15 pm

வெலிமடை, ஊவாபரணகம பகுதியில் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கியை திருட முயற்சித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான வெலிமடை பிரதேச சபை உறுப்பினர் நேற்றிரவு இடிதாங்கியை திருட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்ட அதிகாரிகளும், மக்களும் இணைந்து சந்தேகநபரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

வெலிமடை பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் ஒருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

லூணுவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்