விடுதலைப் புலிகளின் கொடியைப் பயன்படுத்த தடை – இராணுவப் பேச்சாளர்

விடுதலைப் புலிகளின் கொடியைப் பயன்படுத்த தடை – இராணுவப் பேச்சாளர்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 10:34 am

ஐந்தாவது யுத்த வெற்றி விழா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் நாளை  மாத்தறை கடற்கரையில் நடைபெறவுள்ளது.

இம்முறை வெற்றிவிழா தொடர்பில் விளக்கமளிக்கும ஊடகவியலாளர் சந்திப்பு தேசிய பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்றது.

அங்கு கருத்து வெளியிட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவண் வனிகசூரிய

பிரிகேடியர் ருவண் வனிகசூரிய தெரிவுத்த கருத்து :-

“இந்த வெற்றிக் கொண்டாட்டம் பயங்கரவாதத்தை தோற்கடித்ததற்காகும். மாறாக ஒரு மக்கள் பிரிவினரை மற்றுமொரு மக்கள் பிரிவினர் தோற்கடித்ததார்கள் என்று அர்த்தமல்ல. பயங்கரவாதத்தை தேற்கடித்ததன் மூலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு நல்ல திட்டங்கள் கிடைத்துள்ளன. வடக்கு,கிழக்கு மக்களின் வெற்றியை தான் நாங்கள் கொண்டாடுகின்றோம். பாராளுமன்றத்தில் உள்ள 225 பாராளுமன்ற உறுப்பினருக்கும் அழைப்பிதழ்கள் கொடுத்துள்ளோம். இதன் காரணமாக அரசியல் ரீதியில் கட்சி அடிப்படையில் அழைப்பிதழ் கொடுப்பதில்லை  அப்படியான செயற்பாடுகளுக்கு இடமில்லை. அழைப்பிதழ் பத்திரம் என்பது பிடியாணை அல்ல. அழைப்பது எமது கடமை வருவது அவர்களது பொறுப்பு. பயங்கரவாதிகளை கொண்டாடுவதற்கு இடமில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.  பிரபாகரனின் உறவினர்கள் இருந்தால் அவர்களது வீட்டில் தானம் கொடுக்க முடியும் அது எங்களது பிரச்சினை இல்லை. அது உறவினர்களது கொண்டாட்டம்.ஆனால் எல்.ரீ.ரீயின் கொடியை ஏற்றி கொண்டாடுவதற்கு இடமில்லை. அவ்வாறான செயற்பாடுகள் இடம் பெற்றால் நடைமுறையில் உள்ள சட்டத்தின் கீழ் பாதுகாப்பு பிரிவினர் செயற்படுவார்கள்.”

இதேவேளை, நாளை நடைபெறவுள்ள யுத்த வெற்றி விழா அணிவகுப்பில் பாதுகாப்புத் தரப்பின் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாக இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ருவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

இம்முறை அணிவகுப்பு மூன்றுக் கட்டங்களாக நடைபெறவுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்