வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பேர் மாத்தறையில் கைது

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பேர் மாத்தறையில் கைது

வடக்கு, கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பேர் மாத்தறையில் கைது

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 7:06 pm

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 20 பேர் மாத்தறையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தறை நகரில் சந்தேகத்திற்கிடமான முறையில் தங்கியிருந்த நிலையில், நேற்றிரவு, 20 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சந்தேகநபர்கள் வீதி அபிவிருத்தி பணிக்காக மாத்தறைக்கு வந்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட  சந்தேகநபர்கள்  மாத்தறை நீதவான் முன்னிலையில் இன்று முற்பகல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

நீதவானின் உத்தரவிற்கமைய மட்டக்களப்பை சேர்ந்த 09 சந்தேகநபர்களில் மூன்று பேர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

இதேவேளை,  மட்டக்களப்பை சேர்ந்த ஏனைய ஆறு பேரும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட வட பகுதியை  சேர்ந்த சந்தேகநபர்களுக்கு சரீர பிணை வழங்குவதற்கு பிணையாளர்கள் இன்மையால் , 11 சந்தேகநபர்களும்  26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 11 சந்தேகநபர்களில் இரண்டு பேர் மேலதிக விசாரணைகளுக்காக பூசா முகாமிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

மேலும் இரண்டு சந்தேகநபர்கள் தமிழீழ விடுதலை புலிகள்  இயக்கத்தில் துப்பாக்கி பயிற்சி பெற்றவர்கள் எனவும், ஒரு சந்தேகநபரிடம் ஆள் அடையாள அட்டை காணப்படவில்லை எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

யுத்த வெற்றிக் கொண்டாட்டங்கள் நாளை மாத்தறையில் இடம்பெறவுள்ள நிலையில், முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்