முல்லைத்தீவில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

முல்லைத்தீவில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 10:02 am

முல்லைத்தீவு ஒட்டு சுட்டான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள செல்வபுரம் பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

இன்று அதிகாலை 4.30 அளவில் இவர் ரயிலில் மோதியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்