கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
எரிபொருள் மானியத்திற்கு பதிலாக மாற்று மானியங்களை பெற்றுக் கொள்வதற்கு மீனவர்கள்  விண்ணப்பம்

எரிபொருள் மானியத்திற்கு பதிலாக மாற்று மானியங்களை பெற்றுக் கொள்வதற்கு மீனவர்கள் விண்ணப்பம்

எரிபொருள் மானியத்திற்கு பதிலாக மாற்று மானியங்களை பெற்றுக் கொள்வதற்கு மீனவர்கள் விண்ணப்பம்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 7:19 pm

மீனவர்களுக்கான எரிபொருள் மானியத்திற்கு பதிலாக வேறு பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு சுமார்  29 ஆயிரம் மீனவர்கள் விண்ணப்பித்துள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மீனவர்களது விண்ணப்பங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் என்.டீ.ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

எரிபொருள் மானியத்திற்கு பதிலாக மீன்பிடி வலைகள், படகுகள், ஜீ.ஜீ.எஸ் உபகரணங்கள் மற்றும் உயிர் பாதுகாப்பு அங்கிகள் என்பன மீனவர்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, மீனவர்களுக்கான மானியப் பொருட்கள் அடுத்த மாதம் முதல் பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மீனவர்களுக்கான மாற்று மானியப் பொருட்கள் வழங்குவதற்கு நான்காயிரத்து 400 மில்லியன் ரூபா செலவாகும் என கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் என்.டீ.ஹெட்டியாராச்சி சுட்டிக் காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்