கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்
குருநாகலில் பொலிஸ் அதிகாரி கடத்திக் கொலை; பிரதான சந்தேகநபர் கைது

குருநாகலில் பொலிஸ் அதிகாரி கடத்திக் கொலை; பிரதான சந்தேகநபர் கைது

குருநாகலில் பொலிஸ் அதிகாரி கடத்திக் கொலை; பிரதான சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 5:28 pm

குருநாகலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை கடத்தி, அவர்களில் ஒருவரை கொலை செய்த  சம்பவம் தொடர்பிலான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி தெல்தெனிய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால்  பிரதான  சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பான ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்கான விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குருநாகலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நேற்று முன்தினம் கடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்