பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மன்மோகன் சிங்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மன்மோகன் சிங்

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மன்மோகன் சிங்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 6:06 pm

இந்திய பிரதமர்  மன்மோகன் சிங் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

கடந்த 10 வருடங்களாக பிரதமராக பதவி வகித்த கலாநிதி மன்மோகன் சிங் இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முஹர்ஜியை சந்தித்து  பிற்பகல் தமது இராஜினாமா கடிதத்தை கையளித்தார்.

அத்துடன் காங்கிரஸ் அமைச்சரவை அமைச்சர்களும் தமது இராஜினாமா கடிதங்களை குடியரசுத் தலைவரிடம் கையளித்துள்ளனர்.

இந்தியாவின் 16 ஆவது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்துடன்   44 தொகுதிகளில் மாத்திரம்  வெற்றி பெற்று பிரதான எதிர் கட்சி அந்தஸ்தையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்