தங்க நகைகளை மோசடி செய்த பெண்னொருவருக்கு விளக்கமறியல்

தங்க நகைகளை மோசடி செய்த பெண்னொருவருக்கு விளக்கமறியல்

தங்க நகைகளை மோசடி செய்த பெண்னொருவருக்கு விளக்கமறியல்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 8:01 pm

திருகோணமலை, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் சுமார் ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்த பெண்னொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண் திருகோணமலை பதில் நீதவான் திருசெந்தில்நாதன் முன்னிலையில் இன்று பகல் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலி்ல் வைக்கப்பட்டுள்ளார்.

கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய சந்தேகநபரான பெண் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பெண், நான்கு பேரிடம் நகை மோசடி செய்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்