சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

சீனாவின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 12:15 pm

சீனாவின் மத்திய இராணுவ ஆணைக்குழுவின் உபத் தலைவர் எயார் ச்சீஃப் மார்ஷல் சூ க்கிவ்லியன் உள்ளிட்ட இராணுவ உயர்மட்டத் தூதுக்குழுவொன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்துள்ளது.

அலரி மாளிகையில் நேற்று மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதிப் பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உயர் மட்டத்திலான இராணுவத் தூதுக்குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான புரிந்துணர்வை மேம்படுத்தி இரு நாட்டு இராணுவ உறவுகளை பலப்படுத்திக்கொள்வதே தமது விஜயத்தின் நோக்கம் என எயார் ச்சீஃப் மார்ஷல் சூ க்கிவ்லியன் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு நாட்டில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை அவர் பாராட்டியதாகவும் ஜனாதிபதி பேச்சாளர் மற்றும் சர்வதேச ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

சீனா தொடர்பில் இலங்கை வகிக்கும் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்திலும் அந்த நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படாது என ஜனாதிபதி சீனாவின் இராணுவ உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கும், பொருளாதார அபிவிருத்திக்கும், சர்வதேச நடவடிக்கைகளுக்கும் சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு ஜனாதிபதி இதன்போது நன்றி தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்