“சிரசா நமாமி” வெசாக் வலயம் இன்று காலை நிறைவுபெற்றது

“சிரசா நமாமி” வெசாக் வலயம் இன்று காலை நிறைவுபெற்றது

“சிரசா நமாமி” வெசாக் வலயம் இன்று காலை நிறைவுபெற்றது

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 8:27 pm

வெசாக் பூரணையை முன்னிட்டு கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் தலைமையக வளாகத்தில் நடத்தப்பட்ட “சிரசா நமாமி” வெசாக் வலயம் இன்று காலை நிறைவுபெற்றது.

வெசாக் வலயத்திற்கு வருகைதந்த பக்தர்களின் வழிபாட்டுக்காக சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்த பகவானின் புனித சின்னங்களும், புத்த பகவானின் பிரதம சீடர்கள் உள்ளடங்களாக 14 சீடர்களின் புனித சின்னங்களும் இன்று விசேட வாகன ஊர்த்தியில் மீணடும் எடுத்துச் செல்லப்பட்டன.

நேற்று மாலை முதல் இன்று காலை வரை பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த புனித சின்னங்களை வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.

இன்று காலை நடைபெற்ற விசேட சமய அனுஷ்டானங்களின் பின்னர் புத்த பகவானின் பிரதம சீடர்களான செரியுத் மற்றும் முகலன் ஆகிய  தேரர்களின் புனித சின்னங்கள், மருதானையிலுள்ள அக்ரஷ்ராவக்க மகா விஹாரைக்கு விசேட ஊர்தியில் கொண்டுசெல்லப்பட்டன.

அதேபோன்று புத்த பகவானின் புனித சின்னங்கள் கண்டி யட்டிஹலகல ரஜமகா விஹாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்