இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த மோடியின் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் – ஜ.ம.மு

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த மோடியின் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் – ஜ.ம.மு

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை அமுல்படுத்த மோடியின் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் – ஜ.ம.மு

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 7:49 pm

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை முழுமையாக அமுல்படுத்த நரேந்திர மோடி அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அந்தக் கட்சியின் தலைவர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி தெரிவு செய்யப்பட்டமை, இலங்கை – இந்திய உறவுகளில் நன்மையை ஏற்படுத்தும் என தாம் எதிர்பார்ப்பதாக மனோ கணேசன் தமது அறிக்கையில் குறிப்பட்டுள்ளார்.

அண்டை நாடுகள் இரண்டும் நல்லுறவு கொள்வது இரு நாட்டு மக்களுக்கும் நன்மையை தரக் கூடியதாக அமையும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் இந்திய அரசுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தீர்மானங்களை தவிர்த்து விட முடியாது என மனோ கணேசன் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இந்த உறவின் ஊடாக தமது இனவாத அரசியல் நோக்கங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றி கொள்ள முயற்சிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே நரேந்திரமோடி அரசாங்கத்திடம் பிடிவாதம் பிடித்து அரசாங்கத்தின் கபட நோக்கத்தை சாத்தியமாக்க முனைவதாகவும் அவர் தமது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.

எனவே இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை மையமாக கொண்டு இலங்கை இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகளைப் பெற்றுத்தர இந்தியா முன்வரவேண்டும் எனவும் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்