இந்தியாவின் அடுத்தப் பிரதமராக எதிர்வரும் 21 ஆம் திகதி நரேந்திர மோடி பதவியேற்பு

இந்தியாவின் அடுத்தப் பிரதமராக எதிர்வரும் 21 ஆம் திகதி நரேந்திர மோடி பதவியேற்பு

இந்தியாவின் அடுத்தப் பிரதமராக எதிர்வரும் 21 ஆம் திகதி நரேந்திர மோடி பதவியேற்பு

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 3:41 pm

இந்தியாவின் பெரும் ஜனநாயகத் திருவிழாவாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்றுள்ள பாரதீய ஜனதாக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி எதிர்வரும் 21 ஆம் திகதி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதாக்  கூட்டணி 334 தொகுதிகளில் வெற்றி பெற்று  ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

பாரதீய ஜனதாக்கட்சி பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வடோதரா, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதிகளில் போட்டியிட்டார்.
இதில் மோடி வடோதரா தொகுதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வாரணாசி தொகுதியில் 2 லட்சத்து 22,000 வாக்குகள் வித்தியாசத்திலும்   வெற்றி பெற்றார்.

இந்நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி  நாட்டின் 15 ஆவது  பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கவுள்ளதாகவும்  அதற்கான ஏற்பாடுகள்நடைபெற்று வருவதாகவும் இந்துய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்