ஆசிய பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு கொழும்பில்

ஆசிய பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு கொழும்பில்

ஆசிய பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு கொழும்பில்

எழுத்தாளர் Staff Writer

17 May, 2014 | 3:28 pm

தொற்றுநோய் ஒழிப்பு மற்றும் பொது சுகாதார முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் பிராந்திய ஒத்துழைப்பு மாநாடு கொழும்பில் நடைபெறவுள்ளது.

விமானங்கள் மூலம்  வருகைதரும்  பயணிகள் ஊடாக தொற்றுநோய்கள் பரவுவதை தடுப்பதே இந்த மாநாட்டின் நோக்கமாகும்.

இந்த மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

தொற்றுநோய்கள் இலங்கையில் பரவுவவதை தடுப்பதற்காக சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது, சர்வதேச தொடர்புகள் மற்றும் தகவல் பரிமாற்றத்தை விஸ்தரிப்பது, பிராந்திய விமான சேவைகள் மற்றும் சுதாதார அதிகாரிகளுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இந்த மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளது

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் பரவி வருகின்ற மார்க் கொரொனா வைரஸ் போன்ற வைரஸ்கள் நாட்டில் பரவுவதை தடுப்பதற்கு இந்த மாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்