விடுமுறையில் சென்ற ரயில் ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

விடுமுறையில் சென்ற ரயில் ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

விடுமுறையில் சென்ற ரயில் ஊழியர்களை பணிக்குத் திரும்புமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 3:59 pm

விடுமுறையில் சென்றுள்ள ரயில் போக்குவரத்து ஊழியர்களை உடனடியாக கடமைக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே பொதுமுகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன உத்தரவிட்டுள்ளார்.

ரயில் எஞ்சின் சாரதிகள், சாரதி உதவியாளர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்காததை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகயீன விடுமுறையை பதிவுசெய்துள்ள ரயில் போக்குவரத்து ஊழியர்கள் அரச வைத்திய அதிகாரி ஒருவரின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்