விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை 5 வருடங்களுக்கு நீடித்தது இந்தியா

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை 5 வருடங்களுக்கு நீடித்தது இந்தியா

விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை 5 வருடங்களுக்கு நீடித்தது இந்தியா

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 10:35 pm

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை இந்தியா மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடித்துள்ளது.

1967ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டத்தின் கீழ் இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சை மேற்கோள்காட்டி தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

1991ஆம் ஆண்டு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்தியா முதற் தடவையாக தடை செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து, அந்த இயக்கத்தின் மீதான தடை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்துள்ளது.

எவ்வாறாயினும் முதற்தடவையாக கடந்த 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை ஐந்து வருடங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை நீடிப்பு தொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் சட்ட விரோதமான அமைப்பு என விபரிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்