வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை

வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை

வழமைக்குத் திரும்பியது ரயில் சேவை

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 7:32 pm

விடுமுறையில் சென்றிருந்த ஊழியர்கள் மீண்டும் கடமைக்கு சமூகமளித்ததால் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

இதற்கமைய அனைத்து ரயில் சேவைகளும் தற்போது வழமைப்போன்று முன்னெடுக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இரவு நேர ரயில் சேவைகளையும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளவாறு முன்னெடுப்பதற்கு ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

விடுமுறையில் சென்றுள்ள ரயில் போக்குவரத்து ஊழியர்களை உடனடியாக கடமைக்கு சமூகமளிக்குமாறு ரயில்வே பொதுமுகாமையாளர் பி.ஏ.பி.ஆரியரத்ன இன்று பகல் உத்தரவிட்டிருந்தார்.

ரயில் எஞ்சின் சாரதிகள், சாரதி உதவியாளர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் இன்று கடமைக்கு சமூகமளிக்காததை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக ரயில்வே பொதுமுகாமையாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகயீன விடுமுறையை பதிவுசெய்துள்ள ரயில் போக்குவரத்து ஊழியர்கள் அரச வைத்திய அதிகாரி ஒருவரின் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுவதால் பயணிகள் எதர்நோக்க நேரிடும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ரயில்வே பொதுமுகாமையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் ரயில் சாரதிகள் விடுமுறையில் சென்றதால் இன்று முற்பகல் ஏழு ரயில் சேவைகளை இரத்துச் செய்ய நேரிட்டதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்