ரயில் சேவைகள் சில ரத்து

ரயில் சேவைகள் சில ரத்து

ரயில் சேவைகள் சில ரத்து

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 11:44 am

ரயில் சேவைகள் சிலவற்றை இரத்துச்செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவிக்கின்றது.

ஒருசில ரயில் சாரதிகளும், ரயில் கட்டுப்பாட்டாளர்களும் விடுமுறையில் சென்றுள்ளமையே இதற்கு காரணமென நிலையத்தின் பேச்சாளரொருவர் குறிப்பிட்டார்.

இன்று முற்பகல் சேவையில் ஈடுபடவிருந்த 07 ரயில்களின் பயணங்கள் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்தது.

பொல்கஹவெல, பானந்துறை, ரம்புக்கனை மற்றும் மாகோ வரை பயணிக்கவிருந்த ரயில் சேவைகள் இரத்துச்செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெசாக் பூரணை தினத்தினை முன்னிட்டு ஒருசில ரயில் சாரதிகள் விடுமுறையில் சென்றுள்ளதாக லொக்கோமோட்டிவ் ஒபரேடிவ் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் டீ.ஜி.விஜேரத்ன குறிப்பிட்டார்.

சாரதிகள் விடுமுறையில் சென்றுள்ளதால், 20 குறுந்தூர ரயில் சேவைகள் நேற்றைய தினம் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் நீண்டதூர ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டிருந்ததாகவும் ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், வெசாக் தினத்தை பார்வையிடச் செல்வோரின் வசதிகருதி, விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து களுத்துறை வரையும், பொல்கஹவெல வரையும் இந்த ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டதாக நிலையம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்