தெங்கு உற்பத்தி இந்த வருட இறுதியில் வீழ்ச்சியடையும்

தெங்கு உற்பத்தி இந்த வருட இறுதியில் வீழ்ச்சியடையும்

தெங்கு உற்பத்தி இந்த வருட இறுதியில் வீழ்ச்சியடையும்

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 9:32 am

தெங்கு உற்பத்தி இந்த வருட இறுதியில் வீழ்ச்சியடையக்கூடுமென தெங்கு ஆராய்ச்சி நிலையம் குறிப்பிடுகின்றது.

கடந்த காலங்களில் மழைவீச்சி குறைவடைந்தமையே இதற்கு முக்கிய காரணமென லுணுவில தெங்கு ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜயந்த குணதிலக்க கூறினார்.

எவ்வாறாயினும், தற்போது போதியளவு தெங்கு உற்பத்தி செய்யப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அதிகளவிலான செய்கையார்கள் தெங்கு உற்பத்தியில் ஆர்வம் செலுத்துகின்ற போதிலும், வானிலை அதற்கு ஒத்துழைக்காத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஜயந்த குணதிலக்க குறிப்பிட்டார்.

தற்போது தேங்காய் ஒன்று 45 தொடக்கம் 50 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாகவும், ஒரு கிலோகிராம் கொப்பறா 300 ரூபாவிற்கு சந்தையில் விற்கப்படுவதாகவும் தெங்கு ஆராய்ச்சி நிலையம் தெரிவித்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்