துருக்கி சுரங்க விபத்து; உயிரிழப்பு 282 ஆக அதிகரிப்பு

துருக்கி சுரங்க விபத்து; உயிரிழப்பு 282 ஆக அதிகரிப்பு

துருக்கி சுரங்க விபத்து; உயிரிழப்பு 282 ஆக அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 6:08 pm

துருக்கியில் ஏற்பட்ட பாரிய சுரங்க விபத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் பணிப் பகிஷ்கரிப்புக்கு அந்த நாட்டு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

சுரங்க துறை தனியார் மயமாக்கப்படுவதால் தொழில் நிலைமைகள் மிகவும் மோசமடைந்துள்ளதாக தொழிற்சங்க அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதேவேளை இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக இன்று முதல் மூன்று நாள் துக்கதினம் பிரகனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த விபத்து தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

700ற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்த சந்தர்ப்பத்தில் குறித்த சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தை அடுத்து அந்த சுரங்கம் இடிந்து வீழ்ந்ததிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்