சிரச வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்று

சிரச வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்று

சிரச வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்று

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 9:46 am

கொழும்பு 02 பிறேபுரூக் பிளேஸிலுள்ள எம்.ரீ.வி/எம்.பீ.சி ஊடக வலயமைப்பின் தலைமையக வளாகத்திலுள்ள சிரச வெசாக் வலயத்தின் இரண்டாம் நாள் இன்றாகும்.

ஸ்ரீலங்கா அமரபுர பீடத்தின் மகாநாயக்கர் தவுல்தென ஞானீஸ்ஸர தேரரின் தலைமையில் சமய அனுஷ்டானங்களுடன் சிரச வெசாக் வலயம் நேற்று மாலை அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

ஜோன் கீல்ஸ் கூட்டு நிறுவனத்தின் தலைவர் சுசந்த ரத்நாயக்க உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் கெப்பிட்டல் மஹாராஜா நிறுவன உயர்மட்ட அதிகாரிகள் பலரும் அங்குரார்ப்பண நிகழ்வின்போது பிரசன்னமாகியிருந்தனர்.

புத்த பெருமானின் புனித சின்னங்கள் மற்றும் புத்த பெருமானின் பிரதம சீடர்களான சரியுத் மற்றும் முகலனின் புனித சின்னங்கள் அடங்கலாக 14 சீடர்களின் புனித சின்னங்கள் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர சிரச வெசாக் வலயத்தில் புத்த பெருமானின் வரலாற்றை சித்தரிக்கும் வகையிலான டெலி டிஜிட்டல் அலங்கார தோரணமும் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சிரச வெசாக் வலயத்தில் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், பக்தி கீதங்களும் இசைக்கப்படுகின்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிரச வெசாக் வலயத்தை பார்வையிட வருகைதரும் பக்தர்களுக்காக அன்னதானம் மற்றும் குளிர்பானம் என்பனவும் வழங்கப்படுகின்றன.

சிரச வெசாக் வலயத்தை இன்றும், நாளையும் தரிசிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்