‘சிரசா நமாமி’ வெசாக் வலயம் இரண்டாவது நாளாக திறந்துவைப்பு

‘சிரசா நமாமி’ வெசாக் வலயம் இரண்டாவது நாளாக திறந்துவைப்பு

‘சிரசா நமாமி’ வெசாக் வலயம் இரண்டாவது நாளாக திறந்துவைப்பு

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 7:14 pm

கொழும்பு 02 பிறேபுரூக் பிளேஸிலுள்ள எம்.ரீ.வி/எம்.பீ.சி ஊடக வலையமைப்பின் தலைமையக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘சிரசா நமாமி’ வெசாக் வலயம் இன்று இரண்டாவது நாளாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இம்முறை சிரச வெசாக் வலயத்திற்கு ஜோன் கீல்ஸ் கூட்டு நிறுவனம் அனுசரணை வழங்குகின்றது.

புத்த பெருமானின் புனித சின்னங்கள் மற்றும் புத்த பெருமானின் பிரதம சீடர்களான சரியுத் மற்றும் முகலன் ஆகிய தேரர்களின் புனித சின்னங்கள் அடங்களாக  மேலும் 14 சீடர்களின் புனித சின்னங்கள் சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

இந்த புனித சின்னங்களை இன்று பிற்பகல் மூன்று மணி தொடக்கம் பெருந்திரளான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்

இதுதவிர சிரச வெசாக் வலயத்தில் புத்த பெருமானின் வரலாற்றை சித்தரிக்கும் வகையிலான டெலி டிஜிட்டல் அலங்கார பந்தலும் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இம்முறையும் சிரச வெசாக் வலயத்தில் பக்தி கீதங்களும் இசைக்கப்படுகின்றன.

பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றெடுத்த ஸ்ரீ சித்தார்த்த கௌத்தம திரைப்படமும் சிரச வெசாக் வலயத்தில் காட்சிபடுத்தப்படுகிறது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிரச வெசாக் வலயத்தை பார்வையிட வருகைதரும் பக்தர்களுக்கு அன்னதானம், தேனீர், மூலிகை பானங்கள், ஐஸ் கிறீம் என்பனவும் வழங்கப்படுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்