சிகிரியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 30 பேர் வைத்தியசாலையில்…

சிகிரியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 30 பேர் வைத்தியசாலையில்…

சிகிரியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான 30 பேர் வைத்தியசாலையில்…

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 3:49 pm

சிகிரியாவில் குளவிக்கொட்டுக்கு இலக்கான வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிரியா சிங்க பாதத்திற்கு அருகில் இந்தக் குழுவினர் குளவிக் கொட்டுக்கு இலக்கானதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அங்கிருந்த மேலும் சிலர் பாதுகாப்பு பிரிவினரின் முயற்சியினால் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கூறினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்