சங்கக்கார மற்றும் மாலிங்க நாளை அணியுடன் இணைவர் – மைக்கல்.டி.சொய்ஸா

சங்கக்கார மற்றும் மாலிங்க நாளை அணியுடன் இணைவர் – மைக்கல்.டி.சொய்ஸா

சங்கக்கார மற்றும் மாலிங்க நாளை அணியுடன் இணைவர் – மைக்கல்.டி.சொய்ஸா

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 7:07 pm

இங்கிலாந்துக்கு கிரிக்கெட் விஜயம் செய்துள்ள இலங்கை குழாத்துடன் குமார் சங்கக்காரவும், லசித் மாலிங்கவும் இன்றைய தினம் இணையவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மைக்கல் டி.சொய்ஸா ஸ்போட்ஸ் பெஸ்டுக்கு தெரிவித்தார்.

இலங்கை அணி பங்குபற்றும் இரண்டாவது பயிற்சிப் போட்டி கென்ட் பிராந்திய அணிக்கு எதிராக கென்டபரில் நாளை நடைபெறவுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது அதிகுளிரான காலநிலை நிலவுவதுடன் கடந்த இரண்டு நாட்களும் மழை பெய்ததாகவும் இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் கூறினார்.

இதேவேளை, இங்கிலாந்து பிராந்திய மட்டக் கிரிக்கெட் போட்டிகளில் சசெக்ஸ் அணிக்கு எதிராக குமார் சங்கக்கார சதமடித்து அசத்தியுள்ளார்.

சசெக்ஸ் மற்றும் டர்ஹாம் பிராந்திய அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுக்குவந்தது.

போட்டியில் டர்ஹாம் அணி சார்பாக விளையாடிய குமார் சங்கக்கார 2 சிக்ஸர்கள், 18 பௌண்டரிகள் அடங்கலாக 159 ஓட்டங்களைக் குவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்