கூடங்குளம் அணுத் திட்ட விபத்து தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு கோரிக்கை

கூடங்குளம் அணுத் திட்ட விபத்து தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு கோரிக்கை

கூடங்குளம் அணுத் திட்ட விபத்து தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைக்கு கோரிக்கை

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 6:28 pm

தமிகழகத்தின் கூடங்குளம் அணுத் திட்டத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் பக்கசார்ப்பற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அணுத் திட்டத்தின் உயர் அழுத்த வெப்ப நீர்குழாய் வெடித்ததில் 6 பேர் காயமடைந்துள்ள நிலையில் அணு உலைக்கு எதிரான பேராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பீ.உதயகுமார் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த அணுத் திட்டத்தில் தரமற்ற உதிரிப்பாகங்கள் மற்றும் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தாம் ஏற்கனவே கூறியுள்ளதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த விபத்து அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் மத்திய மாநில அரசாங்கங்கள் மற்றும் அணுசக்தி துறை ஆகியன இது குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் எஸ்.பீ.உதயகுமார் கூறியுள்ளார்.

இந்த நிலையில் கூடங்குளம் அணுத் திட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் நிபுணத்துவம் வாய்ந்த குழுவினால் பக்கசார்ப்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை மத்திய அரசின் மெத்தனப் போக்கே இந்த விபத்திற்கு காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்.

தரமற்ற கருவிகள் மற்றும் கட்டமைப்புக்களால் அணு உலை இயங்கிவருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை மெய்பிக்கும் வகையில் இந்த விபத்து அமைந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்

எனினும் இதுவொரு சிறிய சம்பவம் எனவும் இது குறித்து கவலை அடைய தேவையில்லை எனவும் அணுத் திட்டப் பணிப்பாளர் ஆர்.எஸ் சுந்தர் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்