கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலின் கெப்டன் மீது ஆட்கொலை குற்றச்சாட்டு (Video)

கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலின் கெப்டன் மீது ஆட்கொலை குற்றச்சாட்டு (Video)

கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலின் கெப்டன் மீது ஆட்கொலை குற்றச்சாட்டு (Video)

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 5:23 pm

தென்கொரிய கடலில் மூழ்கிய பயணிகள் கப்பலின் கெப்டனுக்கு எதிராக ஆட்கொலை குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

கப்பல் கடலில் மூழ்கிய சந்தர்ப்பத்தில் பயணிகளை ‘வெளியேர வேண்டாம்’ என கூறிவிட்டு அதிலிருந்து 68 வயதான குறித்த கெப்டன் வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கப்பல் விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் முதல் கட்டமாக மீட்கப்பட்டவர்களில் கெப்டனும் அடங்கியிருந்தாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி இடம்பெற்ற கப்பல் விபத்தில் 281 பயணிகள் பலியானதுடன் அதில் அநேகமானவர்கள் உயர் நிலை பாடசாலையொன்றில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஏனைய மூன்று கப்பல் பணியாளர்களுக்கு எதிராகவும் ஆட்கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக தென்கொரியத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்