ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டவருக்கு மரண தண்டனை

ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டவருக்கு மரண தண்டனை

ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டவருக்கு மரண தண்டனை

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 7:58 pm

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை செய்ய திட்டமிட்டவருக்கு அமெரிக்காவின் தெற்கு டகோடா மாநில நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

ஜேம்ஸ் மெக்வே (44) என்ற நபர், கடந்த 2011ஆம் ஆண்டு 75 வயது பெண்மணி ஒருவரை கொலை செய்துவிட்டு அவரது காரை திருடிச் சென்றார். பின்னர் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜேம்ஸ் மெக்வே விசாரணையின் போது, “வொஷிங்டன் சென்று ஜனாதிபதி ஒபாமாவை கொலை செய்யும் திட்டத்துடன் காரை திருடினேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்