உலகின் மிக விலையுயர்ந்த வீடு இந்தியாவில் உள்ளது (Photos)

உலகின் மிக விலையுயர்ந்த வீடு இந்தியாவில் உள்ளது (Photos)

உலகின் மிக விலையுயர்ந்த வீடு இந்தியாவில் உள்ளது (Photos)

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 12:22 pm

உலகின் மிக விலையுயர்ந்த வீடுகளின் பட்டியலை அமெரிக்காவின் போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்த பட்டியலில் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் வீடு முதலிடம் பிடித்துள்ளது. இரண்டாம் இடத்தை லண்டனிலுள்ள இந்திய வம்சாவளி தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் வீடு பிடித்துள்ளது.

4 இலட்சம் சதுர அடி பரப்பளவில் 27 மாடிகளை கொண்ட முகேஷ் அம்பானி தன்னுடைய வீட்டிற்கு அட்லாண்டிக் கடலில் உள்ள மர்மத்தீவான ‘அண்டிலியா’ வின் பெயரை சூட்டியுள்ளார்.

இந்த வீட்டின் மதிப்பு 2 பில்லியன் டொலர் வரை இருக்கும் என ‘போர்ப்ஸ்’ மதிப்பிட்டுள்ளது. அது இந்திய மதிப்பில் 12,000 கோடியாகும்.

27 மாடிகள் கொண்ட அண்டிலியாவில் 6 மாடிகள் கார்பார்க்கிங் வசதிக்காகவும், ஹெலிகொப்டர் இறங்குவதற்கு வசதியாக 3 ஹெலிபேடுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வீட்டில் 600 பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அமெரிக்காவின் சிகாகோ நகர கட்டடக்கலை நிபுணர்களால் வடிவமைக்கப்பட்ட அண்டிலியா 8 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் வந்தாலும் தாங்கக்கூடிய சக்தி கொண்டது.

The house of Mukesh Ambani, chairman of Indian energy company Reliance Industries. antillamumbaicompletedjune2010closeupphoto most-expensive-house-in-world-ground-view-up Antilia-Mumbai-India

வீட்டின் உட்புறம்
mukesh-ambani-two-billion-dollar-home-lobby07 bathroom-2-billion-dollar-home mukesh-ambani-two-billion-dollar-home-Ballroom01 mukesh-ambani-two-billion-dollar-home-Modern-Lounge08


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்