இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்

இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்

இந்திய – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மீண்டும் கிரிக்கெட் தொடர்

எழுத்தாளர் Staff Writer

15 May, 2014 | 6:39 pm

பாகிஸ்தானும் இந்தியாவும் மீண்டும் இரு தரப்பு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளன.

முழுமையான ஆறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவது தொடர்பில் இந்தியாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு வரை இந்த தொடரில் நடைபெறவுள்ளதுடன் இதில் நான்கு தொடர்களை பாகிஸ்தான் நடத்தவுள்ளது.

இதன்பிரகாரம் இந்தக் காலப் பகுதியில் இரண்டு அணிகளும் 14 டெஸ்ட், 30 சர்வதேச ஒருநாள் மற்றும் 12 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடவுள்ளன.

2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மும்பைத் தாக்குதலின் பின்னர் தடைப்பட்டுள்ள இரு தரப்பு கிரிக்கெட் தொடரை மீண்டும் நடத்துவதற்கு முதல் முறையாக உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்