வீடுகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

வீடுகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

வீடுகளை விடுவிக்கக் கோரி கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2014 | 5:57 pm

தமது வீடுகளை விடுவிக்க வேண்டும் எனவும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைக் கோரியும் கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சி நகரத்தில் இன்று (14) காலை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நகர்ப்பகுதியில் உள்ளபோதும் இதுவரையில் தமக்கு வீட்டுத்திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடியதுடன் குறித்த பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதேவேளை, கிளிநொச்சி நகர்ப் பகுதியான பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள வீடுகளை விடுவித்து தம்மை மீள்குடியேற்றுமாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட இன்னொரு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.

குறித்த இடங்களை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தியடையும் நிலையில் உள்ளதாகவும் மக்களின் நிலங்கள் மக்களுக்கே வழங்கப்படும் என்றும் பரவிப்பாஞ்சான் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்