நான் நினைத்தது சரி என்பதை நிரூபித்துள்ளார் யுவராஜ் சிங் –  முத்தையா முரளிதரன்

நான் நினைத்தது சரி என்பதை நிரூபித்துள்ளார் யுவராஜ் சிங் – முத்தையா முரளிதரன்

நான் நினைத்தது சரி என்பதை நிரூபித்துள்ளார் யுவராஜ் சிங் – முத்தையா முரளிதரன்

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2014 | 3:17 pm

ரோயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் முத்தையா முரளிதரன், சக வீரரான யுவராஜ் சிங் 2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் வெற்றி வீரராகத் திகழ்வார் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இருபது ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 21 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுத்து சொதப்பிய யுவராஜ் மீது கடும் அதிருப்தி ஏற்பட்டது. இந்நிலையில், அவர் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு ஆட்டங்களில் தனது அதிரடி ஆட்டத்திற்குத் திரும்பியுள்ளார்.

38 பந்துகளில் 83 ஓட்டங்களை எடுத்த யுவராஜ் நேற்றைய போட்டியில் 29 பந்துகளில் 68 ஓட்டங்களை எடுத்து டெல்லி பந்து வீச்சை நாலாப்பக்கமும் சிதறடித்தார்.
யுவராஜ் சிங்கின் இந்த திடீர் எழுச்சி குறித்து முத்தையா முரளிதரன் ஐபிஎல் இணையதளத்தில் கூறியதாவது:

“நான் யுவராஜிடம் நிறைய பேசி வருகிறேன். அவர் குறைந்த ஓவர்கள் கொண்ட கிரிக்கெட்டில் வல்லுனர் ஆவார். ஆனால் அவரது தன்னம்பிக்கை சற்று தளர்ச்சியடைந்திருந்தது. உலகக் கோப்பை இருபது ஓவர் இறுதிப்போட்டிக்கு பிறகே இந்திய ரசிகர்கள் அவருக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். நான் 20 ஆண்டுகளாக உயர்மட்டத்தில் கிரிக்கெட் ஆடியுள்ளதால் யுவராஜ் சிங்கின் மனநிலை எனக்கு நன்றாக புரியவே செய்தது.

அவரது தன்னம்பிக்கையை மீட்டு விட்டால் அவர் வித்தியாசமான ஒரு வீரர் என்பதை அனைவரும் அறிவர். கடைசி 2 போட்டிகளில் அவர் ஆடிய ஆட்டம் நான் அவரைப்பற்றி நினைத்தது சரி என்பதை நிரூபித்தது. எனவே, 2015 உலகக் கோப்பையில் அவர் இந்திய அணிக்காக பெரிய பங்காற்றுவார் என்று கருதுகிறேன், அவர் அந்தத் தொடரிலும் மேட்ச் வின்னராகத் திகழ்வார்,” என தெரிவித்துள்ளார்  முத்தையா முரளிதரன்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்