சூனியக்காரி சாயலில் இருந்த பிரேசில் பெண் அடித்துக் கொலை; பேஸ்புக் படத்தால் விபரீதம்!

சூனியக்காரி சாயலில் இருந்த பிரேசில் பெண் அடித்துக் கொலை; பேஸ்புக் படத்தால் விபரீதம்!

சூனியக்காரி சாயலில் இருந்த பிரேசில் பெண் அடித்துக் கொலை; பேஸ்புக் படத்தால் விபரீதம்!

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2014 | 1:48 pm

பேஸ்புக்கில் வெளியான புகைப்படத்திலிருந்த சூனியக்காரியைப் போன்ற முகச்சாயல் உள்ள பெண் ஒருவர் பிரேசிலில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

பிரேசில் நாட்டின் கவுர்ஜா நகரை அடுத்த சவ்பலோவைச் சேர்ந்த பேபினோ மரியா (33) என்ற பெண் மீது குழந்தைகளைக் கடத்துகிறார் என்ற குற்றம் சாட்டப்பட்டது.

மேலும், அவர் சூனியக்காரி என சந்தேகித்த அக்கம்பக்கத்தார், கடந்த வாரம் கும்பலாகச் சென்று மரியாவைத் தாக்கியுள்ளனர்.

இதில் பலத்த காயமடைந்த மரியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், சமீபத்தில் பேஸ்புக்கில் வெளியான ஒரு படத்தில் ‘இவர் சூனியக்காரி, குழந்தைகளைக் கடத்துபவர், எச்சரிக்கையாக இருங்கள்’ எனக் கூறப்பட்டு இருந்துள்ளது. அப்படத்தில் இருந்த பெண்ணின் முகம் மரியாவின் உருவத்தை ஒத்து இருந்ததால் சந்தேகத்தின் பேரில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்ததைக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும், மரியாவின் மீது குற்றத்திற்கான எந்த முகாந்திரமும் இல்லை என  பொலிஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்