சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

சிரச வெசாக் வலயம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2014 | 2:23 pm

சிரச வெசாக் வலயத்தில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள புத்த பெருமான் மற்றும் அவரது சீடர்களின் புனித சின்னங்களை ஏந்திய வாகனப் பேரணி பஸ்யால முருத்தவெல விஹாரையிலிருந்து நேற்று (13) பயணத்தை ஆரம்பித்தது.

களனி ரஜமஹா விஹாரையிலிருந்து இன்று காலை புனித சின்னங்களைத் தாங்கிய வாகன ஊர்வலம் ஆரம்பமாகியது.

இம்முறை சிரச வெசாக் வலயத்திற்கான அனுசரணையை ஜோன் கீல்ஸ் நிறுவனம் வழங்குகின்றது.

அதேபோன்று, S-Lon லங்கா தனியார் நிறுவனம் இதற்கான இணை அனுசரணையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.​

களனி ரஜமஹா விஹாரையில் புத்த பெருமான் மற்றும் அவரது சீடர்களின் புனித சின்னங்களை வழிபடுவதற்கு பெருந்திரளான மக்கள் வருகை தந்திருந்தனர்.​

சிரச வெசாக் வலயம் இன்று பிற்பகல் ஆரம்பமாகவுள்ளது.

சிரச வெசாக் வலயத்திற்கு வருகை தருபவர்கள் ஸ்ரீ சித்தார்த்த திரைப்படத்தினைப் பார்க்க முடியும்.

சிரச வெசாக் வலயத்தினை இன்றிலிருந்து நாளை மறுதினம் (16) வரை பார்வையிட முடியும்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்