சிம்பு – செல்வராகவன் படம் திடீர் நிறுத்தம்!

சிம்பு – செல்வராகவன் படம் திடீர் நிறுத்தம்!

சிம்பு – செல்வராகவன் படம் திடீர் நிறுத்தம்!

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2014 | 11:15 am

சிம்புவும் செல்வராகவனும் இணையவிருந்த புதிய படம் திடீரென நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகம் படத்துக்குப் பிறகு, சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கவிருந்தார் செல்வராகன்.
இந்தப் படத்தை வருண் மணியன் என்பவர் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மது அம்பாட் ஒளிப்பதிவு செய்ய, படம் விரைவில் தொடங்கும் என்ற நிலையில், படத்துக்கு திடீர் முட்டுக் கட்டை விழுந்துள்ளது.
இரண்டாம் உலகம் படம் வெளியான போது, அதன் தயாரிப்பாளர்கள் பிவிபி சினிமாவுக்கும் செல்வராகவனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய பிரச்சினை எழுந்தது.
படமும் தோல்வியைத் தழுவியது. பல கோடி ரூபாயை செல்வராகவன் திருப்பிக் கொடுத்ததாக சொல்லப்பட்டது.
ஆனால், பிரச்சினை இன்னும் தொடர்கிறது. எனவே, பிவிபி சினிமா நிறுவனத்துடனான பிரச்சினைகளை செல்வராகவன் முற்றாகத் தீர்த்துக்கொண்டு வரும் வரை இந்தப் படம் தொடங்கப்படாது என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்