குழந்தை அழுததால் வாயில் டேப் ஒட்டிய தாதியர்!

குழந்தை அழுததால் வாயில் டேப் ஒட்டிய தாதியர்!

குழந்தை அழுததால் வாயில் டேப் ஒட்டிய தாதியர்!

எழுத்தாளர் Bella Dalima

14 May, 2014 | 4:09 pm

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள செபு நகரில் உள்ள மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் குழந்தை தொடர்ந்து  அழுதுகொண்டே இருந்ததால் குழந்தையின் வாயில் அங்குள்ள தாதியர்கள் டேப் ஒட்டியதாக தந்தை புகார் கூறி உள்ளார்.

பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ரேயன் நாவல் எனபவர் தனது பேஸ்புக் பதிவில், பிறந்து 5 நாட்களான தனது  குழந்தையின் மேல் உதட்டில் இருந்து கன்னம் வரை ஒரு டேப் ஒட்டப்பட்ட படத்தை வெளியிட்டு உள்ளார். மற்றொரு படத்தில் அந்த டேப் கன்னத்தில் உள்ளது.

மேலும் தனது மனைவி அங்குள்ள தாதியர்களிடம் குழந்தையின் வாயில் ஏன் டேப் ஒட்டபட்டுள்ளது எனக் கேட்டதற்கு குழந்தை அதிகம் அழுகிறான், அதனால் தான் டேப் ஒட்டப்பட்டது எனக் கூறியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் தாய் குழந்தையின் வாயில் உள்ள டேப்பை அப்புறப்படுத்த கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அதற்கு தாதியர் மறுப்புத் தெரிவித்ததால்  தாயே அதை அப்புறப்படுத்தியுள்ளார்.

பின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் முறைப்பாடு செய்துள்ளார்.

நிர்வாகம் விசாரணை நடத்துவதாகக் கூறி உள்ளது.

 

Nurse-shuts-babys-mouth2


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்