யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

யாழ். பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

எழுத்தாளர் Staff Writer

13 May, 2014 | 1:28 pm

யாழ். பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன.

பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்திற்கு அமைய, கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக யாழ்.பல்கலைகழக உப வேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

யாழ்.பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய, யாழ்.பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் அனைத்து மாணவர்களும் விடுதிகளிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதிகளிலிருந்து வெளியேறும் மாணவர்களை 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்குப் பின்னர் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைகழகத்தின் கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் என கடந்தவாரம் பல்கலைக்கழக பதிவாளரால் கையொப்பமிடப்பட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்