மாணவியின் தலை முடியை வெட்டிய ஆசிரியைகள் பிணையில் விடுதலை

மாணவியின் தலை முடியை வெட்டிய ஆசிரியைகள் பிணையில் விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2014 | 9:29 pm

ஆறாம் தர மாணவியொருவரின் விருப்பமின்றித் தலை முடியை வெட்டிய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இரண்டு ஆசிரியைகளும்,  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்திலுள்ள பாடசாலையொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு ஆசிரியைகள், குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவரின் தலை முடியை அவரது விருப்பமின்றி, கடந்த 8ஆம் திகதி வெட்டியுள்ளனர்.

சம்பவத்தை எதிர்கொண்ட மாணவி தெரிவித்ததாவது;

“ஒருவர் என்னை கணினி அறைக்கு இழுத்துச் சென்றார். மற்றைய ஆசிரியை தலை முடியை வெட்டினார். ஏனைய மாணவிகள் கூச்சலிட்டனர். நானும் கூச்சலிட்டேன். வெட்டிய தலை முடியை வீசுவதாகக் கூறினார்கள். அந்த முடியை பலா மரத்திற்கு அருகில் வீசினார்கள். அதன் பின்னர் வேண்டாம் எனக் கூறும் போது புகைப்படத்தை எடுத்தார்கள். அந்த பாடசாலையில் கல்வி பயில்வதற்கு எனக்கு அச்சமாகவுள்ளது.”

தனது பிள்ளையின் விருப்பமின்றி, அவரது முடி வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்களது பெற்றோர் அன்று பிற்பகல் வத்தேகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.

இந்த முறைப்பாட்டை அடுத்து குறித்த இரு ஆசிரியைகளும் நேற்று (12) கைது செய்யப்பட்டு, தென்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர்  பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்