மனைவியுடன் கட்டாய உறவு பலாத்காரம் ஆகாது – டெல்லி நீதிமன்றத்தின் முரணான தீர்ப்பு!

மனைவியுடன் கட்டாய உறவு பலாத்காரம் ஆகாது – டெல்லி நீதிமன்றத்தின் முரணான தீர்ப்பு!

மனைவியுடன் கட்டாய உறவு பலாத்காரம் ஆகாது – டெல்லி நீதிமன்றத்தின் முரணான தீர்ப்பு!

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2014 | 4:33 pm

திருமணம் ஆன பிறகு மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியை அடுத்த காஜியாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனக்கு மயக்க மருந்து கொடுத்து மனம் தெளிவில்லாத நிலையில் கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 4ம் திகதி பதிவாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தன்னைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும், அதன் பின்னர் தனது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி உறவு கொண்டதாகவும் இளைஞர் ஒருவர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இயற்கைக்கு மாறான உறவையும் வைத்துக் கொண்டதாக பொலிசில் தெரிவித்துள்ளார்.

இதனைத்  தொடர்ந்து அந்த இளைஞரை பொலிசார் கைது செய்தனர்.

அவர் மீது பலாத்காரம், ஆள் கடத்தல், இயற்கைக்கு மாறான உறவு ஆகிய பிரிவுகளில் வழக்குத் தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்ததற்கான ஆதாரம் எதுவும் பொலிசாரால் சமர்ப்பிக்கப்படவில்லை, பெண்ணின் வாக்குமூலம் முன்னுக்குபின் முரணாக உள்ளது. பதிவுத் திருமண சான்றிதழில் பெண்ணின் கையெழுத்து உள்ளது. திருமணம் ஆன பிறகு அவரது சம்மதம் இல்லாமல் கணவர் உறவு கொண்டிருந்தாலும் அது பலாத்காரம் ஆகாது. எனவே, இந்த வழக்கிலிருந்து இளைஞரை விடுவிக்கிறோம், என தீர்ப்பளித்தார்.

பொதுவாக மனைவி என்றாலும் அவரது சம்மதம் இல்லாமல் உறவுகொள்வது பலாத்காரம் என்றே பல்வேறு நீதிமன்றங்கள் தீர்ப்பளித்து வருகின்றன.

இந்நிலையில், அதற்கு நேர் மாறாக டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்