பௌத்த தர்ம சுலோகங்களுக்கான Mobile App அறிமுகம்

பௌத்த தர்ம சுலோகங்களுக்கான Mobile App அறிமுகம்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2014 | 9:23 pm

S-Lon லங்கா தனியார் நிறுவனம் பௌத்த தர்ம சுலோகங்கள் மற்றும் தர்ம உபதேசங்களைக் கேட்கக்கூடிய மொபைல் அப் இனை (MOBILE APP ) இன்று (13) அறிமுகப்படுத்தியுள்ளது.

புத்த பெருமானினால் போதிக்கப்பட்ட பிரித் மற்றும் கதைகள் இந்த மொபைல் அப் ( Mobile App ) இல் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் இந்த  நிகழ்வு இன்று முற்பகல் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கெப்பிட்டல் மஹாராஜா நிறுவனத்தின் குழுமப் பணிப்பாளரான எஸ்.சி.வீரசேகர உள்ளிட்ட மேலும் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

iPhone மற்றும் Android ஆகிய தொலைபேசிகளில் இந்த Application ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

Pirith & Gatha From S-Lon  என டைப் செய்து இந்த புதிய Application ஐ  பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்