‘பொலிஸார் என்றும் சொல்லவில்லை, சீருடையிலும் வரவில்லை’ – கைதாகி விடுவிக்கப்பட்ட மாணவர்

‘பொலிஸார் என்றும் சொல்லவில்லை, சீருடையிலும் வரவில்லை’ – கைதாகி விடுவிக்கப்பட்ட மாணவர்

‘பொலிஸார் என்றும் சொல்லவில்லை, சீருடையிலும் வரவில்லை’ – கைதாகி விடுவிக்கப்பட்ட மாணவர்

எழுத்தாளர் Bella Dalima

13 May, 2014 | 10:37 pm

பிலியந்தல – கெஸ்பெவ பகுதியில் 16 வயது பாடசாலை மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலை பொலிஸார் தம் மீது தாக்குதல் மேற்கொண்டதில் காயம் ஏற்பட்டுள்ளதாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட மாணவரும் அவரது தயாரும் குறிப்பிட்டனர்.

கெஸ்பெவ, பெரேரா மாவத்தையில் வசிக்கும் குறித்த மாணவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) வீட்டிலிருந்த வேளையில் முற்பகல் 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பின்னர் அவர் பிலியந்தலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

[quote]இரண்டு கைகளுக்கும் விலங்கிட்டனர். அழைத்துச்  சென்று கதிரையில் விலங்குடன் அமர வைத்திருந்தனர். ஏன் என்று எனக்குத் தெரியாது. நான் கேட்டபோதும் அது தொடர்பில் எனக்கு அவர்கள் கூறவில்லை. பொலிஸார் என்றும் சொல்லவில்லை. சீருடையிலும் வரவில்லை,[/quote] என்றார் குறித்த மாணவர்.

அவரின் தாயார் தெரிவிக்கையில்;

” வேலையில் நிற்கும் போது 4 மணியளவில் பிலியந்தலை பொலிஸார் தொலைபேசி அழைப்பெடுத்து உங்களது மகன் பொலிஸில் இருக்கிறார் எனவும் வந்து கூட்டிப் போகுமாறும் கூறினர்.  பின்னர் 9.30 மணியளவில் மகனிடம் வாக்குமூலம் பெற்றனர். மகனிடம் கையெழுத்து வாங்விட்டு விடுதலை செய்தனர். அதன் பின்னர் அடுத்த நாள் காலையில் கல்கிசை பொலிஸிற்குச் சென்று முறைப்பாடு செய்தோம். மகனை அழைத்துச் சென்று வைத்தியசாலையில் காட்டுமாறு பொலிஸார் கடடிதம் தந்தனர்.”

வீடொன்றில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கு முன்னரும் வீடொன்றில் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த மாணவரின் வாக்குமூலம் மற்றும் கைவிரல் அடையாளம் பெறப்பட்டதன் பின்னர் அவரை விடுதலை செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்