பொலன்னறுவை சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

பொலன்னறுவை சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

பொலன்னறுவை சிறையிலிருந்து கைதி தப்பியோட்டம்

எழுத்தாளர் Staff Writer

13 May, 2014 | 1:01 pm

பொலன்னறுவை சிறைச்சாலையில் இருந்து நேற்றிரவு கைதியொருவர் தப்பிச்சென்றுள்ளார்.

வெசாக் தயார்படுத்தல்களில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்தக் கைதி தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெணிய கூறினார்.

திருட்டு சம்பவம் தொடர்பில் கைதாகி, தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.

இதேவேளை, அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து கடந்த 09 ஆம் திகதி இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர்.

அவர்களை கைதுசெய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்