புதிதாக 4,000 கிராம உத்தியோகத்தர்களை இணைக்க நடவடிக்கை

புதிதாக 4,000 கிராம உத்தியோகத்தர்களை இணைக்க நடவடிக்கை

புதிதாக 4,000 கிராம உத்தியோகத்தர்களை இணைக்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

13 May, 2014 | 7:23 am

நாட்டில் சுமார் 4,000 கிராம உத்தியோகத்தர்களை விரைவில் புதிதாக இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவிக்கின்றது.

நாடெங்கிலும் 4,400 கிராம உத்தியோகத்தர்களுக்கு பதவி வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சர் டபிள்யூ ஜே செனவிரத்ன குறிப்பிட்டார்.

சுமார் 500 உத்தியோகத்தர்கள் இதுவரையில் தமது நியமனங்களை பொறுப்பேற்கவில்லை என அமைச்சர் கூறினார்.

இதற்கமைய, பரீட்சையின் புள்ளிகளுக்கு அமைய, ஏனையவர்களை பதவிக்கு இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் டபிள்யூ ஜே செனவிரத்ன மேலும் சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்